கரூரில் வாழைத்தார் விலை உயர்வு; மொந்தன் ரூ.720-க்கு விற்பனை

கரூரில் வாழைத்தார் விலை உயர்ந்தது. மொந்தன் ரூ.720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரூரில் வாழைத்தார் விலை உயர்வு; மொந்தன் ரூ.720-க்கு விற்பனை
Published on

கரூர் மாவட்டம் நொய்யல், மரவம்பாளையம், வேட்டமங்கலம், கவுண்டன்புதூர், ஒரம்புப்பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகளை சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்ததும் கூலியாட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ250-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ.370-க்கும், ரஸ்தாளி ரூ.350-க்கும், பச்சநாடன் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.720-க்கும் விற்பனையானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com