மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை

மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை
Published on

நெல்லை,

தென்மேற்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக வனத்துறையினர் தடைவிதித்தனர். கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com