கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com