வரத்து அதிகரிப்பால்பீன்ஸ் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.50-க்கு விற்பனை

வரத்து அதிகரிப்பால்பீன்ஸ் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.50-க்கு விற்பனை
Published on

ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான பீன்ஸ் ஊட்டி, கொடைக்கானல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. நார் சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகம் கொண்ட பீன்ஸ், சாம்பார், கூட்டு, பொரியல் வெஜிடபிள் பிரியாணி, பல்வேறு வகையான துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடும் காயாக பீன்ஸ் உள்ளது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.58-க்கு விற்பனையான பீன்ஸ் சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை பல்வேறு விலைகளில் விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com