கரடி அட்டகாசம்

பந்தலூர் அருகே கரடி அட்டகாசம் செய்தது.
கரடி அட்டகாசம்
Published on

பந்தலூர் அருகே ரிச்மெண்ட் காலனி, அட்டி, இரும்புபாலம், இண்ட்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அது வீடுகளின் கதவுகளை உடைத்து சமையல் எண்ணெயை குடிப்பதோடு உணவு பொருட்களையும் தின்று வருகிறது. சமீபத்தில் தாஸ் என்பவரின் வீட்டின் சமையலறையை உடைத்து சமையல் எண்ணெயை குடித்து சென்றது. இதுகுறித்து அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com