கரடி அட்டகாசம்

களக்காடு அருகே கரடி அட்டகாசம் செய்தது.
கரடி அட்டகாசம்
Published on

களக்காடு:

களக்காடு அருகே மஞ்சுவிளை பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. இந்த கரடி வாழைகளையும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் 20-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. .கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே வாழை தோட்டங்களுக்குள் உலா வந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும், கரடிகள் நாசம் செய்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com