கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி - பொதுமக்கள் அச்சம்

கரடிகள் உலா வருவது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி - பொதுமக்கள் அச்சம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கார்சலையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் கரடி ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செடிகளுக்குள் இருந்து வெளியே வந்த கரடியை பார்த்த மக்கள் உடனடியாக வீடுகளுக்குள் ஓடி கதவுகளை பூட்டிக் கொண்டனர்.

சாலையில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் கரடியை பார்த்ததும் ஓடிச் சென்று வீட்டிற்குள் தஞ்சமடைந்தனர். பின்னர் அந்த கரடி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்ததாக கூறப்படுகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்திக்கும் குடியிருப்புகளுக்குள் தொடர்ந்து கரடிகள் உலா வருவதால் வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com