முன்விரோதம் காரணமாகஇரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

வீரபாண்டி அருகே இரு தரப்பினர் மோதலில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்விரோதம் காரணமாகஇரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
Published on

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 65). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முத்துவேல். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 19-ந்தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது முத்துவேல், அவரது உறவினர் பாண்டியன் உள்பட 5 பேர் சேர்ந்து ராஜாவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் முத்துவேல், ராஜா, அருண்மொழி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com