வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடி புகைப்படம்: முதல்-அமைச்சர் விஜய்

அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் 'உலக புகைப்பட நாள்' நல்வாழ்த்துகள் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடி புகைப்படம்: முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமாகும்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது 'உலக புகைப்பட நாள்' நல்வாழ்த்துகள்! உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com