

சென்னை,
மாணவ செல்வங்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும் வாழ்த்துகள் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
குழந்தைகள் தின வாழ்த்துகள்!
திருச்சி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவிப்பின்படி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ செல்வங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் கேக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள சையது முர்துஷா பள்ளி மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் மாணவ செல்வங்களுக்கு கேக் வழங்கி, குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து அவர்களுடன் அன்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடினேன்.
கல்வி என்பது பாடப்புத்தகங்களோடு மட்டும் நின்றுவிடாமல், மகிழ்ச்சி, அன்பு, தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலுடன் அமைய வேண்டும். மாணவ செல்வங்களின் மகிழ்ச்சியான குழந்தை பருவத்திற்கும், சிறப்பான எதிர்காலத்திற்கும் வாழ்த்துகள்!
அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.