ரஷிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்கப்படுகின்றன.
ரஷிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு
Published on: 

சென்னை,

ரஷிய எண்ணெய்க்கான போக்குவரத்து கட்டணங்கள் (Freight costs) பெருமளவு உயர்ந்துள்ளதாலும், ரஷ்யா வழங்கும் தள்ளுபடிகள் குறைந்துள்ளதாலும், இந்திய நிறுவனங்களுக்கு ரஷிய எண்ணெய் தற்போது லாபகரமாக இல்லை.

கப்பல் வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், வரும் நவம்பர் மாதத்தில் ரஷியாவிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவைக் குறைக்கப் பாரத் பெட்ரோலி யம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வங்கியின் நிதிப்பிரிவு இயக்குனர் வெட்சா ராமகிருஷ்ண குப்தா கூறுகையில், "போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் ரஷிய எண்ணெய்க்கான விலைச் சலுகை பலன் குறைந்துள்ளது. எனவே, நவம்பரில் ரஷிய இறக்குமதி குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்கப்படும்" என்றார்.

கடந்த காலாண்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தேவையில் ரஷிய எண்ணெய் 37 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com