அரசு கலைக்கல்லூரியை பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வி வல்லுனர் குழு ஆய்வு

அரசு கலைக்கல்லூரியை பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வி வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.
அரசு கலைக்கல்லூரியை பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வி வல்லுனர் குழு ஆய்வு
Published on

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பராசிரியர் சக்திகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட பொது (மூவாண்டு) ஆய்வு வல்லுனர் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கல்லூரியில் உள்ள அனைத்து துறைகள், ஆய்வகங்கள், நூலகம், தாவரவியல் தோட்டம், உடற்கல்விகூடம் மற்றும் அலுவலக கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.மேலும் நேரடியாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களின் எண்ணிக்கை அவர்களுடைய கல்வித் தகுதி, மாணவர் சேர்க்கை விபரம், உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை, கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை, அப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதா? போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.ஆய்வின்போது, கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன், 14 துறையை சேர்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com