பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா; சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா; சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 29 முதல் மே 5ம் தேதி வரை 'தமிழ் வார விழா' கொண்டாடப்பட உள்ளது.

சட்டசபையின் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடைபெறும். பள்ளிகளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும். தமிழில் சிறந்து விளங்கும் இளம் கவிஞருக்கு 'பாரதிதாசன் இளம் படைப்பாளர்' விருது வழங்கப்பட உள்ளது.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "எளிமையான சொற்கள் மூலம் வலிமையான கருத்துக்களை சொன்னவர் பாரதிதாசன் . நமது மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க தமிழ் வார விழா ஒரு நல்வாய்ப்பாகும். செந்தமிழைப் பரப்ப, அறிவுச் செல்வத்தைக் காட்ட தமிழ் வார விழா வழிவகை செய்யும்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com