படித்துறை, தடுப்பு சுவர் கட்ட பூமி பூஜை

காவிரி கரையில் படித்துறை, தடுப்பு சுவர் கட்ட பூமி பூஜை
படித்துறை, தடுப்பு சுவர் கட்ட பூமி பூஜை
Published on

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் புதுப்பித்தல், புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்புச்சுவர் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார். குத்தாலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சம்சுதீன், 4-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுகன்யா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம் அன்பழகன் கலந்துகொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com