சின்னபுதூர் கிராமத்தில்குடிநீர் குழாய் பதிக்க பூமி பூஜை

சின்னபுதூர் கிராமத்தில்குடிநீர் குழாய் பதிக்க பூமி பூஜை
Published on

தர்மபுரி:

தர்மபுரி அடுத்த செம்மாண்டகுப்பம் ஊராட்சி சின்னபுதூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியம் ரூ.9.55 லட்சம் மதிப்பீட்டில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் தனி நபர் குடிநீர் குழாய் பதிக்க பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் தம்பி ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவி அருண், வார்டு உறுப்பினர் பிரபு, பொறுப்பாளர்கள் காவேரி, தமிழ்செல்வன், குணா, வேலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com