வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய கைதான பீகார் வாலிபர் சென்னை அழைத்து வரப்பட்டார்.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
Published on

தமிழ்நாட்டில் தங்கி இருந்து பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசார் விசாரணை நடத்தி வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில் அதில் ஒருவர் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னா சென்று தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு தனிப்படை போலீசார் மணீஷ் காஷ்யப்பை பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com