ஆரணி அருகே மின்சாரம் தாக்கி பீகார் வாலிபர் உயிரிழப்பு

தூக்கி வீசப்பட்ட அவரை உடன் பணிபுரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிரிழப்பு
Published on: 

ஆரணி,

ஆயுத பூஜைக்காக எந்திரங்களை சுத்தம் செய்தபோது, மின்சாரம் தாக்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது தொழிலாளி உயிரிழந்தார்.

ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர். ரோட்டில் அரிசி ஆலை உள்ளது. இந்த அரிசி ஆலையில் பீகார் மாநிலம் காய்காட் மாவட்டம் உசேன்ஸ் யேகிபாஷ் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச மாஜீத் என்பவரின் மகன் கங்கேஷ் பீகாரி மாஜீத் (வயது 21) என்பவர் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வந்தார்.

மின்சாரம் தாக்கி

இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு கங்கேஷ் பீகாரி மாஜீத் எந்திரங்களை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உடன் பணிபுரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com