விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது

விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது
Published on

விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி வசந்தா (வயது 20). இவருடைய தந்தை பூமாலை என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் அண்ணன், தம்பிகள் ஆவர். இவர்களுக்கு 2 ஏக்கர் பூர்வீக நிலத்தை ஆறுமுகம் தரப்பினர் மட்டுமே பயிர் செய்து வருகின்றனர். இதில் பூமாலை தரப்பினர் பங்கு கேட்டபோது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். வசந்தா அளித்த புகாரின்பேரில் ஆறுமுகம் மகன் செல்வக்குமார், பாவாடை (46), அவரது மனைவி செல்வி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவாடையை கைது செய்தனர். இதேபோல் ஆறுமுகம் மகன் கணபதி அளித்த புகாரின்பேரில் விக்னேஷ் (25), பார்த்திபன், டேவிட் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com