கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்; மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.. - நயினார் நாகேந்திரன்

காலம் கடந்தும் அவரது படைப்புகள் தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நினைவுகூர்கிறோம்

தமிழின் உணர்வுகளையும் மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் எளிய சொற்களில் கவிதையாக்கிய கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். அவரது வரிகள் வெறும் பாடல் வரிகளாக அல்லாமல், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வழிகாட்டிகளாகவும் திகழ்கின்றன.

காதல், நட்பு, பக்தி, தத்துவம் என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தமிழுக்கு அரிய இலக்கியச் செல்வங்களாக வழங்கியவர் கண்ணதாசன். காலம் கடந்தும் அவரது படைப்புகள் தலைமுறைகளை ஊக்குவித்து வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com