

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் தவெக 108 இடங்கள் மற்றுமே வெற்றி பெற்றது. பெரும்பான்மை பெற அக்கட்சிக்கு தேவை 118 ஆக இருக்க, த.வெ.க. தற்போதைய நிலையில் 109 இடங்களையே கைப்பற்றி இருக்கிறது. இன்னும் பெரும்பான்மையை பெற அக்கட்சிக்கு 9 இடங்கள் அவசியம்.
தமிழகத்தில் இன்னும் 5 தொகுதிகள் காலியாக உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி விடுவதாக சொல்லி வந்த நிலையில் தவெகவிற்கு பாமக ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது இந்த வந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாமக தலைவர் அன்புமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்தினார்.
அதை தொடர்ந்து நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்காக முதல்-அமைச்சர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தன . மேலும் தவெக அரசின் மீது அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்கள் ஆதரவை இடைத்தேர்தலுக்கு பிறகு வாபஸ் வாங்கி விடுவதாக சொல்லி வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்-அமைச்சர் விஜய், அன்புமணி வாழ்த்து பரிமாற்றம் தவெக மற்றும் பாமக கட்சிகளின் கூட்டணியை உறுதி செய்வது போல் உள்ளது.