

சென்னை,
சாதி, சமயம், சடங்குகளை கடந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாக கருதிய வள்ளலார் பிறந்தநாள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தனிப்பெரும் கருணை நாள்: சாதி, சமயம், சடங்குகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதிய வள்ளலார் பிறந்தநாள்
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு:
🔹வள்ளலாரின் உயரிய கருத்துகள் உலகெலாம் சென்றடைய அனைத்துலக வள்ளலார் மாநாடு,
🔹அம்மாநாட்டில் 8 புதிய அறிவிப்புகள்,
🔹வள்ளலார் முப்பெரும் விழா,
🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு,
🔹திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என வள்ளலாரைப் போற்றிச் சிறப்பித்தது நமது திரவிட மாடல் அரசு.
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கை போல அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவ மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கருத்துகளும் சுடர்விட்டு மக்கள் மனங்களில் எரிய வேண்டும்! மதமென்னும் பேய் நம்மை பிடியாதிருக்க வேண்டும்!”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.