பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

நெல்லை டவுனில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை டவுன் குளப்பிறை தெருவில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டவுனில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்த முதியவர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பராமரிப்பு பணியின்போது கல் விழுந்து காயம் அடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நெல்லை மாநகராட்சியை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் வேல் ஆறுமுகம், டி.வி.சுரேஷ், முத்துபலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர் முருகதாஸ், செயலாளர்கள் நாகராஜன், மாரியம்மாள், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com