கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுதாக்கல்: பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்

கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுதாக்கல்: பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை எடுத்துக்கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை வர இருப்பதாகவும், அந்த பட்டியலை மாநில நிர்வாகிகளிடம் காண்பித்து வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

இதிலும் மாநில நிர்வாகிகள் மாற்றத்தை வலியுறுத்தினால், பட்டியல் இரவு அல்லது நாளை வெளியாகும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்த தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை நீக்கம் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், R.முரளீதரன் அவர்கள், கட்சியின் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com