பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல்லில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
Published on

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு சார்பாக திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் மல்லிகா, கிழக்கு நகர தலைவர் ரமேஷ், ஊடகப்பிரிவு கிழக்கு நகர துணைத் தலைவர் சதீஷ்குமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக்வினோத், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் தேவராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com