சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புக் கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்தும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் பேச்சை கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com