பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வருகை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வருகை
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இரண்டு நாள் பயணமாக நான் தமிழகம் வரவுள்ளேன். இந்தப் பயணத்தின் போது, இராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறேன். மேலும் சாத்தூர், மதுரை தெற்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள ரோட் ஷோக்களிலும் பங்கேற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com