சென்னை: கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றபோது காணாமல்போன மராட்டிய இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது

நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றபோது அலையில் சிக்கி காணாமல்போன மராட்டிய இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மராட்டியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் மூவரும் சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை ஒன்றுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மூவரும் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Also Read
கொளத்தூரில் ரூ.1.61 கோடியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோப்புப்படம்

இதில் ஒருவர் காயமின்றி தப்பிய நிலையில், மயூரி சவுத்ரி (21 வயது) என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றொரு இளைஞர் ஜெய் நரேந்திர படீலை காணவில்லை. அவரை கடலோர காவல்படையினரின் உதவியுடன் 3 முதல் 4 டிரோன்களை பயன்படுத்தி போலீசார் தேடி வந்தனர்.

Also Read
ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள் தற்போது... - மு.க.ஸ்டாலின் பதிவு
கோப்புப்படம்

இந்த நிலையில் காணாமல் போன நரேந்திர படீலின் உடல் சென்னையில் உள்ள தனியார் கடற்கரை ஒன்றில் இன்று கரை ஒதுங்கியுள்ளது. அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்
கோப்புப்படம்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com