செல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் உடல் மீட்பு

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே செல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர்.
செல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் உடல் மீட்பு
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோடு, கூழங்கலச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் 25 அடி உயரசெல்போன் கோபுரத்தில் உள்ள வயரில் தூக்கில் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். இது குறித்து சோமங்கலம் போலீசார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com