சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

தமிழகத்தின் மிகவும் முக்கிய, பரபரப்பான ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையமும் ஒன்று. தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் ரெயில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com