ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
Published on

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி 78 நாட்கள் போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது.

இந்த போனஸ் அறிவிப்பின் மூலம் 11 லட்சத்து 27 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். தீபாவளிக்கு 12 நாட்களுக்கு முன்பாக சரியான நேரத்தில் இந்த போனஸ் அறிவித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.     

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com