

ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பழைய சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 16). இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் பசு மாட்டை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேய்ச்சல் நிலத்தில் எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியை பசு மாடு மிதித்துள்ளது. அதனை காப்பாற்ற முயன்ற போது சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நரேஷ் இன்று முதல் 12ம் வகுப்பில் அடியெடுத்து வைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. பசுவைக் காக்கச் சென்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோலூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.