நம்பியூர் அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

நம்பியூர் அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
நம்பியூர் அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
Published on

நம்பியூர்

நம்பியூர் எம்மாம்பூண்டி அருகே அழகம்பாளையத்தில் ஏரிக்காட்டு பகுதியில் முனியப்பன் கோவில் மற்றும் கன்னிமார் கோவில்கள் அமைந்துள்ளது. கன்னிமார் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறையும், முனியப்பன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவுக்கு 2 நாட்கள் முன்பு கோவில் உண்டியலில் உள்ள காணிக்கைகளை எண்ணுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை முனியப்பன் கோவில் பூசாரி ஜெயக்குமார் பூஜை செய்ய கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் அருகே உள்ள கன்னிமார் கோவில் உண்டியலிலும் பணம் திருட்டுபோனது.

இது குறித்து தகவல் கிடைத்தும் வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com