தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

புஞ்சைபுளியம்பட்டியில் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மாமநபாகளை போலீசா வலைவீசி தேடி வருகிறாகள்.
தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
Published on

புஞ்சைபுளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 58). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி தேவி. இவர் பவானிசாகர் அருகே உள்ள புங்கார் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் அந்தோணிசாமி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com