விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது.
விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

விழுப்புரம் எம்.எஸ்.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவர் நேற்று காலை தனது தந்தையின் திதிக்காக வீட்டை பூட்டிவிட்டு சொந்த கிராமமான கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்திற்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் அங்கிருந்து விழுப்புரம் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள், சக்திவேல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com