கோடை காலத்தில் கறிக்கோழி இறைச்சி நுகர்வு 20 சதவீதம் குறைவு


கோடை காலத்தில் கறிக்கோழி இறைச்சி நுகர்வு 20 சதவீதம் குறைவு
x

கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவால் நாமக்கல்லில் 1 கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை இன்று ரூ.88-ஆக உள்ளது.

சென்னை

கோடை காலம் என்பதால் தற்போது கறிக்கோழி இறைச்சி நுகர்வு 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவால் நாமக்கல்லில் 1 கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை இன்று ரூ.88-ஆக உள்ளது. இதனால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்று கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் கறிக்கோழி 1 கிலோ (உயிருடன்) ரூ.88-க்கும், முட்டைக்கோழி 1 கிலோ ரூ.85-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் கறிக்கோழி உயிருடன் 1 கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரையிலும், தோல் நீக்கிய கறி 1 கிலோ ரூ.200 வரையிலும் விற்பனையாகிறது. நாமக்கல்லில் 1 முட்டை விலை இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.4.10 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ரூ.5-க்கு விற்பனையாகிறது.

1 More update

Next Story