வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

வீட்டின் பூட்டு உடைப்பு

வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை குளிமாகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி புஷ்பா (வயது 53). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மகளின் பிரசவத்திற்காக புஷ்பா வீட்டை பூட்டிக்கொண்டு பெங்களூரு சென்றுள்ளார். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து வீட்டின் அருகே உள்ள உறவினரை தொடர்பு கொண்டு, அவரது வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் படி கூறிஉள்ளார்.

இதையடுத்து புஷ்பாவின் வீட்டிற்கு சென்ற உறவினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை பார்த்து அவர் இதுகுறித்து புஷ்பாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நகை, பணம் திருட்டு

உடனே புஷ்பா திம்மம்பேட்டை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து புஷ்பா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com