வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அழகப்பா லே அவுட்டை சேர்ந்தவர் நடராஜன்(வயது 55). டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக குடும்பத்துடன் அரவக்குறிச்சி சென்று இருந்தார்.

இந்தநிலையில் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு மடிக்கணினி திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com