வீட்டின் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள், பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள், பணம் திருட்டு
Published on

வீட்டின் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூஜை பொருட்கள் திருட்டு

திருச்சி பாலக்கரை அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). சம்பவத்தன்று இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டின் முன்பகுதியில் உள்ள பூஜை அறையில் இருந்த பூஜை பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். வீட்டிற்கு வந்ததும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், இதுபற்றி பாலக்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com