போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகர் கைது
Published on

சென்னையை அடுத்த புழல் ஆட்டந்தாங்கல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 54). பாடியநல்லூர் பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து வேறு சிலருக்கு விற்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த நில தரகரான திரு.வி.க நகரை சேர்ந்த ராமைய்யா (73) என்பவரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com