சொத்து பிரச்சினையில் தம்பியை தாக்கி கொலை முயற்சி; அண்ணன் கைது

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினையில் முன் பகை இருந்து வந்தது.
சொத்து பிரச்சினையில் தம்பியை தாக்கி கொலை முயற்சி; அண்ணன் கைது
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த முத்துராமசந்திரன் (வயது 46) என்பவருக்கும், அவரது சகோதரர் மணிகண்டன்(47) என்பவருக்கும் இடையே உள்ள சொத்து பிரச்சினையில் முன் பகை இருந்து வந்தது.

இதன் காரணமாக மணிகண்டன், முத்துராமசந்திரனை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கி, கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து முத்துராமசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாளையம்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com