சொத்து தகராறில் தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் - நாகையில் பரபரப்பு...!

நாகையில் சொத்து தகராறில் தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறில் தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் - நாகையில் பரபரப்பு...!
Published on

தலைஞாயிறு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் திருவிடைமருதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சாணபுரத்தான் மகன்கள் மூர்த்தி (வயது35), மாசிலாமணி(40 ). அண்ணன்-தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாசிலாமணி, தம்பி மூர்த்தியின் விட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மூர்த்தியின் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து மூர்த்தி அளித்த புகாரின் போரில் தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பி விட்டுக்கு தீ வைத்த அண்ணன் மாசிலாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com