மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி

பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் என்ஜின்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பி.எஸ்.4 என்ஜின் பரிசோதனை நடைபெற்றது.

665 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுண்ட்டவுன் தொடங்கி சோதனை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com