தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை மீண்டும் தொடங்கியது

மழையால் செல்போன் டவர்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை மீண்டும் தொடங்கியது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது.

தொடர்ந்து மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மழையால் செல்போன் டவர்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், மழை, வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com