மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

வேடசந்தூர் அருகே மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு
Published on

வேடசந்தூர் அருகே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக குடகனாறு அணை பகுதியில் இருந்து அதிக அளவில் செம்மண் அள்ளி வரப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் நேற்று அணை பகுதியில் மண் அள்ளிய 5 டிப்பர் லாரிகளை பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அனுமதி சீட்டு இல்லாமல் மண் அள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து டிரைவர்கள் லாரிகளை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். மேலும் பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com