மாட்டு வண்டி எல்கை பந்தயம்

மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தயத்தில் நடுமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 88 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் நிர்ணயித்த எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது சாலையில் நின்று பந்தயத்தை கண்டு களித்த பொதுமக்கள் கைத்தட்டி மாட்டு வண்டி ஓட்டி வரும் சாரதிகளை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் ஆடுகளும் வழங்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் ரசிகர்கள் ஏராளமானோர் நின்று கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு புதுக்குடி சுப்பையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com