வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.
வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புலியூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 69). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 11-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை முகப்பேரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார். இநத நிலையில், நேற்று வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், வெள்ளிப்பொருட்கள், விலை உயர்ந்த சேலைகள் உள்ளிட்டவைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com