பாலக்கோடு பஸ் நிலையத்தில்அரசு பஸ் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது

பாலக்கோடு பஸ் நிலையத்தில்அரசு பஸ் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது
Published on

பாலக்கோடு:

ஓசூரில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பாலக்கோடு பஸ் நிலையத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்தது. அப்போது என்ஜினின் கீழ் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டு சுதாரித்து கொண்ட டிரைவர் உடனடியாக என்ஜினை நிறுத்தினார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி என்ஜினில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com