தூக்கில் பிணமாக தொங்கிய இறைச்சி கடை உரிமையாளர்

திருமருகல் அருகே இறைச்சி கடை உரிமையாளர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
தூக்கில் பிணமாக தொங்கிய இறைச்சி கடை உரிமையாளர்
Published on

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன்தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் இரவில் அவரது இறைச்சி கடையில் தூங்குவது வழக்கம்.இந்த நிலையில் சம்பவத்தன்று சம்சுதீன் இறைச்சி கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். பின்னர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com