

மதுராந்தகம்,
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓட் டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் கும்ரவேல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமாகினர். இதனையடுத்து இந்த 2 தொகுதிகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் மதுராந்தகத்தில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேலும், தி.மு.க. சார் பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மா.கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க. சார்பில் பானு மதி, தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் சுயேச்சைகள் உள்பட இந்த தொகுதியில் மொக்கம் 22 பேர் போட்டியிடுகின்றனர்
2 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தீவிர பிரசாரம் செய்தனர்.
இந்த பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், கள்ளபிரான்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள எண் 72 வாக்குச்சாவடி, முழுமையாக பெண்களுக்கான வாக்குச்சாவடியாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச்செல்லும் ஒவ்வொரு வாகனங்களும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்காக மதுராந்தகத்தில் 2 ஆயிரத்து 614 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் மத்திய ஆயுதப்படை போலீசார் 480 பேரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் தாராபுரம் தொகுதியில் மொத் தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 பேர் உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆகி யவை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று நடந்தது.
தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 1,486 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணி யில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 9-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.