

சென்னை,
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யாவை வெற்றிபெறச் செய்யுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதல்-அமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதல்-அமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யாவை வெற்றிபெறச் செய்யுங்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.